சிறைகளில் பாதுகாப்பு அதிகரிக்கட்டும்!

சிறைகளில் பாதுகாப்பு அதிகரிக்கட்டும்!
Updated on: 
2 min read

தமிழகத்தில், 17 சிறைக்கைதிகள் தப்பியோடியதும் இனி கைதிகள் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டால் அவர்களைச் சுட்டுப்பிடிக்கச் சிறைத் துறை உத்தரவிட்டதும் விவாதங்களுக்கு வழிவகுத்தன.

இந்தச் சூழலில், சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக முன்னாள் டிஜிபி ஜே.கே.திரிபாதி தலைமையில் உயர்நிலை ஆய்வுக்குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது.

தேனி மாவட்டம், தேக்கம்பட்டி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் அக்டோபர் 26 அன்று தப்பினர். முன்னதாக அக்டோபர் 20 அன்று புழல் சிறையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பினர்.

அதேபோல், கோயம்புத்தூர் மத்தியச் சிறையில் அடைக்கப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட விசாரணைக் கைதி ஒருவர் சிறையில் அடைக்கப்படும் முன் தப்பியோடினார். புழல், தேனி கைதிகள் பிடிபட்ட நிலையில், கோவை கைதி நவம்பர் 3 அன்று பிடிபட்டார்.

Loading content, please wait...

X