ஆற்று மணல் கொள்ளை: அரசு நடவடிக்கை தொடரட்டும்

ஆற்று மணல் கொள்ளை: அரசு நடவடிக்கை தொடரட்டும்
Updated on: 
2 min read

அரசு, சமூகம், இயற்கை என எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிகழ்த்தப்படும் ஆற்று மணல் கொள்ளை விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புக் காவல் துறை வழக்குப் பதிவுசெய்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் 2021-2024இல் விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டதால் அரசுக்கு ரூ.1,427.34 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டி, லஞ்ச ஒழிப்புத் துறை நவம்பர் 5 அன்று வழக்குப்பதிவு செய்தது.

இதில் முதலில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் நீர்வளத் துறையின் முன்னாள் அமைச்சர் துரைமுருகன். அந்தத் துறையின் இரண்டு முன்னாள் தலைமைப் பொறியாளர்கள், அரசு ஊழியர்கள், மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் என 28 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மணல் அள்ளுவதற்கான ஒப்பந்தம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கிடைக்கும்படி வெளியிட்டது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளியது முதலிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சிறு கனிம உரிம விதிமுறைகள் 38-ஏ பிரிவுப்படி மணல் குவாரி நடவடிக்கைகளில் தனியாரை அனுமதிக்கக் கூடாது; அரசு மட்டுமே ஈடுபட வேண்டும் என உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு 2023இல் தள்ளுபடி செய்யப்பட்டது.

Loading content, please wait...

X