

எடைகள், அளவீடுகள் ஆகியவற்றின் கட்டமைப்பையும் அதைச் சரிபார்க்கும் சூழலமைப்பையும் மேம்படுத்தும் வகையில், தனியார் பங்களிப்பை அனுமதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இம்முடிவு ஆக்கபூர்வமான பலன்களை அளிப்பதற்கு இதன் நடைமுறைச் செயல்பாடுகள் கவனமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
கடந்த அக்டோபர் 23 அன்று மேற்கொள்ளப்பட்ட சட்ட அளவையியல் (அரசால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மைய) விதிகள் 2013இன் திருத்தத்தின்கீழ் இந்தச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களை அமைப்பதில் பங்கேற்க விண்ணப்பிக்குமாறு தனியார் ஆலைகள், ஆய்வகங்கள், சோதனை மையங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.