

செயற்கை நுண்ணறிவு, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி மருத்துவமனைகள், மருத்துவர்கள் விளம்பரம் செய்வதற்குத் தேசிய மருத்துவ ஆணையம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் வரவேற்கத்தக்கவை.
நாடு முழுவதும் மருத்துவமனைகள், மருத்துவர்கள், மருத்துவ நிறுவனங்கள் வெளியிடுகிற விளம்பரங்கள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை, கடந்த அக்டோபர் மாதம் தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வெளியிட்டது; உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்நடவடிக்கையை மேற்கொண்டது.
மருத்துவமனைகள், மருத்துவர்கள் தங்களது சேவையின் தரம் சிறப்பாக இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்துவதும் தங்களை நாடும் நோயாளிகளைக் கட்டாயப்படுத்திச் சில தளங்களில் தரவரிசை, கருத்துகளைப் பதிவிடச்செய்வதும் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இந்த வழிகாட்டுதல்களில் இடம்பெற்றுள்ளன.
‘பிற மருத்துவமனைகளுடன் ஒப்பீடு, 100 சதவீதம் குணப்படுத்துவதாக உத்தரவாதம், பிரபலங்கள் உள்ளிட்டோரின் பரிந்துரைகள், போலியான சான்றுகள் / தகவல்களை உள்ளடக்கிய விளம்பரங்கள் கூடாது.