நீதிபதி குரியன் குழு கலைப்பு: அடுத்தகட்ட நகர்வு என்ன?

நீதிபதி குரியன் குழு கலைப்பு: அடுத்தகட்ட நகர்வு என்ன?
Updated on: 
2 min read

மத்திய – மாநில உறவை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழு கலைக்கப்படுவதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அக்குழுவின் பணிகள் தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அந்தக் குழுவினர் ஏற்கெனவே மேற்கொண்ட பணிகளின் தொடர்ச்சியாக ஆணையத்தின் செயல்பாடுகள் அமையுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

2025, ஏப்ரல் 17இல் மாநிலங்களின் முதன்மை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழு அமைக்கப்படுவதாக, அப்போதைய திமுக அரசு தெரிவித்தது. 2026 பிப்ரவரியில் இக்குழு தமது அறிக்கையின் முதல் பாகத்தைச் சமர்ப்பித்ததோடு, இரண்டாம் பாக அறிக்கையை 2027 மே மாதம் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்திருந்தது.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆணையம் சீரமைக்கப்படுவதாகத் தெரிவித்த தமிழக அரசு, மத்திய – மாநில உறவுகள் தொடர்பான விவகாரங்களை இனி இந்த ஆணையம் மேற்கொள்ளும் என்றும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் குழு கலைக்கப்படுவதாகவும் அறிவித்தது.

திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தமிழக அரசு இம்முடிவைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தின. இது மாநில சுயாட்சிக்கான வரலாற்றுச் செயல்பாடுகளுக்கு இழைக்கப்பட்ட பின்னடைவு எனத் திமுக விமர்சித்தது.

Loading content, please wait...

X