டெல்லி மின்னூர்திக் கொள்கை: பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டட்டும்!

டெல்லி மின்னூர்திக் கொள்கை: பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டட்டும்!
Updated on
2 min read

டெல்லி ஒன்றிய ஆட்சிப் பகுதி அரசு அண்மையில் வெளியிட்ட வரைவு மின்னூர்திக் கொள்கை 2.0, காற்று மாசுப் பிரச்சினையால் அவதிப்பட்டுவரும் தலைநகருக்குக் கைகொடுக்குமா என்கிற எதிர்பார்ப்பை விதைத்துள்ளது.

காற்று மாசுக் குறைப்பு, தூய்மைப் போக்குவரத்து ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, 2026 – 2030க்கான மின்னூர்திக் கொள்கையை வெளியிட்டுள்ளது டெல்லி அரசு. மின்னூர்திப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், 30 லட்சம் ரூபாய் வரையிலான மின்சார வாகனங்களை வாங்கினால் சாலை வரி, பதிவுக் கட்டணம் ஆகியவற்றில் 100% விலக்கு அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில், புதிதாக மின்னூர்திகள் வாங்கும்போது பழைய வாகனங்களை அகற்றுவதற்கான ஊக்கத்தொகை வழங்கப்படுவது உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in