தொடரும் கொலைகள்: வேர்கள் அகற்றப்படுமா?

தொடரும் கொலைகள்: வேர்கள் அகற்றப்படுமா?
Updated on
2 min read

அண்மையில் சிவகங்கையில் இரண்டு இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவமும், அவர்களின் சடலங்களை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்திய உறவினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் அதிர்ச்சி அளிக்கின்றன. குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக எழும் விமர்சனங்களுக்கு அரசு முகங்கொடுக்க வேண்டிய தருணம் இது.

செப்டம்பர் 16 அன்று, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள கொடிக்காடு கண்மாய்ப் பகுதியில் தெய்வேந்திரன், பூப்பாண்டி ஆகியோர் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டனர்.

கொலையானவர்களின் சடலங்களை வாங்க மறுத்து உறவினர்களும், மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து 16 வயதுச் சிறுவன் உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

உயிரிழந்த இளைஞர்களின் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு பேருக்குத் தற்காலிக அரசுப் பணி வழங்கிய பிறகே போராட்டம் கைவிடப்பட்டு, இறந்தவர்களின் சடலங்களை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in