

ஒவ்வோர் ஆண்டும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாள்களிலும் ‘நீட்’ தேர்வு முடிவு வெளியாகிற நாள்களிலும் சில மாணவர்கள் தங்களை மாய்த்துக்கொள்வது மிகுந்த கவலையளிக்கிறது. மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்கிற கற்பிதம் எதிர்காலச் சந்ததியின் அவல முடிவுக்குக் காரணமாக அமைவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
உலக அளவில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில்தான் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்துகொள்கின்றனர். காரணம், இங்குதான் தேர்வின் வெற்றி - தோல்விக்கும் மதிப்பெண்ணுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.