

ஐந்து மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட உள்ளதாக வெளியான செய்திகளை மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் மறுத்துள்ளது. எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது.
மேற்காசியப் போர் காரணமாக எரிசக்தித் தட்டுப்பாடு உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயு விலை ரூ.868.50இல் இருந்து ரூ.928.50 ஆக சென்னையில் உயர்த்தப்பட்டது.
இதனுடன் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படவே கள்ளச்சந்தையில் காஸ் சிலிண்டர்கள், திரவ எரிபொருள் அதிக விலையில் விற்கப்படும் சிக்கல் மூண்டது.