சமூக நீதி ஆய்வு: வரவேற்கத்தக்க நடவடிக்கை

சமூக நீதி ஆய்வு: வரவேற்கத்தக்க நடவடிக்கை
Updated on: 
2 min read

சமூக நீதி (சாதிவாரி) ஆய்வை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகளைத் தமிழக அரசு தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டைப் பேணவும், அதைத் தக்கவைத்துக்கொள்ளவும், இடஒதுக்கீட்டின் பலன் உரியவர்களுக்குக் கிடைக்கவும் தேவையான சாதி சார்ந்த தரவுகள் இந்த ஆய்வின் மூலம் அரசுக்குக் கிடைக்கும்.

தமிழகத்தில் சமூக நீதி ஆய்வு நடத்த ஆணையம் அமைக்க அக்டோபர் 29 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தவெக அரசு அமைந்ததற்குப் பிந்தைய முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் மத்திய அரசின் சாதிவாரிக் கணக்கெடுப்பு முடிந்த பிறகு, மாநில அரசு கணக்கெடுப்பை நடத்தும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்புக்காக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் சமூக நீதி ஆய்வு ஆணையம் அமைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவார்கள்.

Loading content, please wait...

X