

சிறாரின் குழந்தைமையை மீட்கும் வகையில், 16 வயதுக்கு உள்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதித்து வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்திருக்கிறது ஆஸ்திரேலிய அரசு.
சிறாரின் பாதுகாப்பு, மனநலம், டிஜிட்டல் போதைக்குத் தீர்வு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ஆஸ்திரேலியாவின் ‘இணையப் பாதுகாப்புத் திருத்த மசோதா 2024’ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, 2025 டிசம்பர் 10 முதல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததுள்ளது. இனி, ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டகிராம், யூடியூப் உள்ளிட்ட 10 சமூக ஊடகங்களை 16 வயதுக்கு உள்பட்டோர் பயன்படுத்த முடியாது. இதை மீறிச் சிறார் பயனர்களை அனுமதிக்கும் நிறுவனங்களுக்கு 4.95 கோடி டாலர்வரை அபராதம் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.