ஆனைமங்கலம் செப்பேடுகள் தமிழகம் கொண்டுவரப்பட வேண்டும்

ஆனைமங்கலம் செப்பேடுகள் தமிழகம் கொண்டுவரப்பட வேண்டும்
Updated on
2 min read

சோழர் காலத்தைச் சேர்ந்த ஆனைமங்கலம் செப்பேடுகளை அண்மையில் இந்தியாவிடம் நெதர்லாந்து அரசு ஒப்படைத்ததைத் தொடர்ந்து, அவை டெல்லியில் உள்ள மத்தியக் காப்பகத்தில் வைக்கப்படும் என்னும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், அவற்றைத் தமிழகத்துக்குக் கொண்டுவரும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்னும் குரல்கள் எழுந்திருக்கின்றன. அண்மையில் நெதர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மே 16இல் தி ஹேக்கில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகம் சென்றார்.

அதன் நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டுவந்த லெய்டன் செப்பேடுகள் என்னும் ஆனைமங்கலம் செப்பேடுகள் அந்நாட்டுப் பிரதமர் ராப் ஜெட்டன் முன்னிலையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

சைலேந்திர வம்சத்தைச் சேர்ந்த மாற விஜயதுங்க வர்மன், நாகப்பட்டினம் அருகே சூளாமணி பெளத்த விகாரம் அமைக்க அனுமதி கேட்க, அதன் பொருட்டு ராஜராஜ சோழன் ஆனைமங்கலம் பகுதியில் உள்ள நிலத்தைத் தானமாக வழங்கினார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in