Published : 30 May 2023 06:26 AM
Last Updated : 30 May 2023 06:26 AM
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் தமிழ்கற்காத 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கூடுதல் கட்டாய மொழிப் பாடமாகத் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு வரவேற்புக்குரியது.
தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில், ‘கட்டாயத் தமிழ்க் கற்றல் சட்டம் 2006’ நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம், அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாகப் படிக்க வேண்டும் என்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT