Published : 30 Mar 2023 07:00 AM
Last Updated : 30 Mar 2023 07:00 AM
சாதி, மதம், இனம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு நிலவுவதைவிடப் பேரவலம் எதுவும் இல்லை. சாதிப் படிநிலைகளில் ஊறிப்போன சமூகமாக அறியப்படும் இந்தியாவில், அந்த அவலம் நிறுவனரீதியாகக் கட்டமைக்கப்பட்டிருப்பது பெரும் துயரம்.
அந்த வகையில், கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள கோயிலைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் நடமாடக் கூடாது என 1920களில் நிலவிய தடைக்கு எதிரான போராட்டம், இந்தியாவின் சமூக நீதிப் பாதையில் மிக முக்கியமான மைல்கல். அந்தப் போராட்டத் தொடக்கத்தின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுவது, இன்றைக்கும் சாதிப் பிரிவினைகள் தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில் மிக முக்கியமானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT