Published : 27 Dec 2022 06:45 AM
Last Updated : 27 Dec 2022 06:45 AM
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர், திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்பாகவே முடிவடைந்திருப்பதும், எதிர்பார்க்கப்பட்ட பல சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்படாததும் இந்த ஆண்டை ஏமாற்றத்துடன் நிறைவடைய வைத்திருக்கிறது.
குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 7 முதல் 29ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜி20 அமைப்பின் ஓராண்டு தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் நிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடர், மிகவும் முக்கியமானது எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்திருந்தார். கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என அவர் விடுத்திருந்த கோரிக்கையை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT