

ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் அடங்கிய குழு அக்டோபர் இறுதியில் தங்களது பரிந்துரைகளை அளித்ததற்குப் ஒரு மாதத்துக்குப் பிறகு வெளிவந்த உட்பணிக் குழுவின் அறிக்கைக்குக் கடும் எதிர்வினைகள் எழுந்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ரிசர்வ் வங்கியின் கீழ் அமைந்துள்ள பணிக் குழுக்களால் தயாரிக்கப்படும் அறிக்கைகள், வங்கி மற்றும் நிதித் துறைக்கு வெளியேயும் அடிக்கடி கவனம்பெறுவதோடு, அவ்வப்போது எதிர்ப்பையும் சந்திக்கின்றன.
இந்தக் குழு தனியார் வங்கிகளின் உரிமையாளர்களுக்கான விதிமுறைகளையும் அந்நிறுவனங்களுக்கான அமைப்புமுறைகளையும் மதிப்பிடும் பணியை மேற்கொண்டது. பாரம்பரியமான கடன் வழங்குநர்கள், அத்துறையில் நுழையும் புதியவர்கள் ஆகியோரையும் உள்ளடக்கும் வகையில் அனைத்து வங்கிகளுக்கும் உரிமங்கள் வழங்குவதற்கான விதிமுறைகளில் ஒத்திசைவை உருவாக்குவதற்கான பயனுள்ள யோசனைகளைத் தெரிவித்திருக்கிறது. ஜூன் மாதத்தில் இந்தக் குழு நியமிக்கப்பட்டபோது பொதுமுடக்கம் காரணமாக நாடு பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருந்ததால் அது பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால், வங்கிகளை ஊக்குவிப்பதற்காக வணிக நிறுவனங்கள் அல்லது தொழில் நிறுவனங்களை அனுமதிக்கலாம் என்ற அக்குழுவின் பரிந்துரை கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
‘வங்கியை ஊக்குவிக்கும் வணிக நிறுவனங்களின் நிதித் துறை சாராத நடவடிக்கைகள்’ தனியாகப் பிரித்துப் பார்க்கப்படுவது ஆபத்தானது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதே அச்சத்தை, ‘எஸ்