

அண்மையில் மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்திலுள்ள பத்வா என்னும் ஊரில் நர்மதை நதிக்கரை அருகே சுமார் 200க்கும் மேற்பட்ட கிளிகள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவற்றோடு அந்த வட்டாரத்தில் புறாக்கள் உள்ளிட்ட வேறு சில பறவைகளும் மடிந்ததாகச் சொல்லப்பட்டது.
‘இது பறவைக்காய்ச்சலின் எதிரொலி’ என்று பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நஞ்சான உணவை உண்டதால் கிளிகள் இறந்தது உடற்கூறாய்வில் தெரியவந்தது. அதன் பின்னணியை முழுமையாக அறிய, அவற்றின் உடல்பாகங்கள் ஜபல்பூர் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. பறவைகள் பாதுகாப்பில் நாம் எங்கிருக்கிறோம் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது இவ்விவகாரம்.