

முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி ரூ.50 ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு கடன் பத்திரங் களை சந்தையிலிருந்து வாங்கு கிறது.
உட்கட்டமைப்புத் திட்டங் களைச் செயல்படுத்திவரும் ஐஎல் அண்ட் எஃப்எஸ் செலுத்த வேண் டிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கி கொண்டது. இந்நிறுவனத் தின் நிதி சிக்கல் இந்திய பொருளா தாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன்காரண மாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியை அளிக்கும்படி கோரியது. ஆனால், இந்த விவகாரம் பல்வேறு சர்ச் சைகளைச் சந்தித்தது. எனவே, உபரி நிதி பங்கீடு குறித்து அரசும் ரிசர்வ் வங்கியும் இன்னும் தெளி வான ஒரு முடிவை எட்டவில்லை.
எனவே, தற்போது நிலவும் நிதி நெருக்கடியை சீராக்க வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.50 ஆயிரம் கோடிக்கு அரசு கடன் பத்திரங்களை பங்குச்சந்தையில் வாங்க உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.