

வாகனங்களில் இருந்தபடி குப்பையை வீசினாலோ எச்சில் துப்பினாலோ ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் பூங்கா, சாலை உள்ளிட்ட பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் உத்தரப் பிரதேச அரசு அண்மையில் அறிவித்துள்ளது. திடக்கழிவு மேலாண்மையில் அம்மாநில அரசு காட்டும் அக்கறை வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டிலும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் 2024 – 2025 நிலவரப்படி ஒவ்வொரு நாளும் 16,563 டன் கழிவு வெளியேற்றப்படுகிறது. இதில் 7,260 டன் கழிவு குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுகிறது. நிலைத்த கழிவு மேலாண்மைக்காக மாநிலம் தழுவிய இயக்கமாகத் ‘தூய்மைத் திட்டம்’ தொடங்கப்படும் எனக் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின்கீழ் இது செயல்படும் எனவும் அறிவித்தது.