

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகள் வெப்பமண்டலப் புயலால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. கடந்த 2010இலிருந்தே ஆந்திரப் பிரதேசம் பெரிய அளவிலான வெப்பமண்டலப் புயல்களைச் சந்தித்துவருகிறது.
இதில் தமிழ்நாடு, ஒடிஷா மாநிலங்களும் பாதிக்கப்படுகின்றன. இப்பிரச்சினைக்கு முகங்கொடுக்க நாம் தயாராக வேண்டியது அவசியம். வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இந்த அம்சத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். காற்றின் திசையில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாக ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவ மழையும் தமிழகத்தில் பொழிவது வழக்கம்.