

அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், அரசு - தனியார் அலுவலகங்கள் உட்படப் பலவகைப்பட்ட கட்டிடங்களில் வாகனங்களை நிறுத்த எவ்வளவு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று 2019இல் வெளியிடப்பட்ட தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி, கட்டிட விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் தனி வீடுகளுக்கான வாகன நிறுத்துமிட வரையறையில் திருத்தம் செய்து, அக்டோபர் 10 அன்று அரசிதழில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்டிருக்கிறது.
‘300 ச.மீ. அல்லது 3,300 சதுர அடி வரை பரப்புள்ள தனி வீடுகளில் 2 கார் நிறுத்தம் - 2 பைக் நிறுத்தத்துக்கான இடம் ஒதுக்கப்பட வேண்டும்’ எனவும், ‘அதைவிட அதிகப் பரப்புள்ள வீடுகளில் 4 கார் நிறுத்தம் மற்றும் 4 பைக் நிறுத்தத்திற்கான இடம் ஒதுக்கப்பட வேண்டும்’ என்றும் மற்கொள்ளப்பட்டுள்ள திருத்தமானது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்குப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.