

தீபாவளியை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசு காரணமாக சென்னையில் காற்றின் தரம் கடந்த ஆண்டைவிடவும் இந்த ஆண்டு மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மிக முக்கியமான இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வுகாண வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
தீபாவளியின்போது நாடு முழுவதும் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்க, உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளை 2018இல் பிறப்பித்தது. தலைநகர் டெல்லி - அதன் சுற்றுப்புறங்களில் பட்டாசு வெடிக்க முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டது.