

2021லிருந்து 2025 செப்டம்பர் 15வரை 1,34,674 நாய்களுக்கு (88,439 தெரு நாய்கள், 46 235 வளர்ப்பு நாய்கள்) வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி; 71,475 தெரு நாய்களுக்குக் கருத்தடை அறுவைசிகிச்சைகளும் செய்யப்பட்டன எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நாய்க்கடி சம்பவங்கள் மீதான ஊடகங்களின் விமர்சனங்களை அடுத்து, இது சார்ந்த சென்னை மாநகராட்சிப் பணிகள் சற்று வேகம் எடுத்துள்ளன. தெருநாய்களைச் சிகிச்சைக்காக மாநகராட்சியிடம் சேர்ப்பிக்கும் அளவுக்கு மக்களுக்குப் போதிய நேரம் இருக்கிறதா, ஒரு வார்டில் நாய்களுக்கு உணவளிக்க எனத் தனியாக இடம் ஒதுக்குவதில் உள்ள பிரச்சினைகள் ஆகியவற்றைக் குறித்துப் பேசுவது அவசியமாகிறது.