

சிறந்த உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை நிர்ணயிக்கும் தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு (என்ஐஆர்எஃப்) முறையில் பாரபட்சம் நிலவுவதாக விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இதில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, மருந்தியல், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடக்கலை, வேளாண்மை, திறந்தநிலைப் பல்கலைக்கழகம், திறன் பல்கலைக்கழகம், மாநிலப் பொதுப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 17 வகைப்பாடுகளின்கீழ் நாட்டில் ஒட்டுமொத்தமாக உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.