

பெற்றோர் இருவரையும் இழந்த, பெற்றோரில் ஒருவரை இழந்து சரிவரப் பராமரிக்கப்படாத குழந்தைகளை அரவணைக்கும் வகையில் ‘அன்புக்கரங்கள்’ திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பெற்றோர் இல்லாத, பராமரிக்க இயலாத குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தொடங்கப்பட்டிருக்கும் இத்திட்டம் பாராட்டத்தக்கது.
தமிழகத்தில் ஏற்கெனவே சமூக நலன் சார்ந்த திட்டங்கள் பலவும் அமலில் உள்ளன. சமூகத்தில் மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களைக் கண்டறிந்து, அக்குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக ‘தாயுமானவர்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.