

மாநிலப் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் தமிழ்நாடு அரசிடமிருந்து பறிக்கப்பட்டிருப்பதால், 12 பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர் இல்லாத நிலை நீடிக்கிறது. மேலும் சில துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடியும் தறுவாயை நெருங்கிவிட்டதால் பிரச்சினை தீவிரமடைந்திருக்கிறது. உடனடியாகத் தீர்வுகாண வேண்டிய விவகாரம் இது.
புதிய துணைவேந்தரைத் தேர்வுசெய்ய அந்தந்தப் பல்கலைக்கழகத்துக்கு எனத் தேடுதல் குழு அமைக்கப்படும். இதில், பல்கலைக்கழக ஆட்சிக்குழு, கல்விக்குழு, கல்விப்பேரவை ஆகிய மூன்று குழுக்களால் தெரிவு செய்யப்பட்ட தலா ஒருவர் என மூன்று உறுப்பினர்கள் இடம்பெறுவர்.