

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூருக்குச் சென்ற இரண்டு தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் போட்டி போட்டுக்கொண்டு பேருந்துகளை வேகமாக இயக்கியதும் சாலையில் பேருந்துகளை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் அண்மையில் பேசுபொருள் ஆகியிருக்கின்றன.
பயணிகளின் உயிரைப் பற்றியும் சாலையில் செல்வோரைப் பற்றியும் கவலைப்படாமல் டிக்கெட் வசூலுக்காக அதிகப் பயணிகளை ஏற்றுவதற்கு இவர்கள் தறிகெட்டுப் பேருந்துகளை இயக்கியது கண்டிக்கத்தக்கது. ஒரு நாளைக்கு இவ்வளவு வசூலாக வேண்டும் என லாப நோக்குடன் இலக்கு நிர்ணயித்து ஓட்டுநர்களையும் நடத்துநர்களையும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.