

இணையவழி சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் ‘இணையவழி விளையாட்டு ஊக்குவித்தல் - ஒழுங்குமுறை மசோதா 2025’ குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுச் சட்டமாக மாறியிருப்பது வரவேற்கத்தக்கது. இணையவழி சூதாட்டத்தைக் கட்டுப்படுத்தும் இந்த முயற்சி பொதுமக்களின் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட மத்திய அரசின் பாராட்டுக்குரிய நடவடிக்கை.
இந்தியாவில் இணையவழி விளையாட்டுகளில் மோசடிகள் நடப்பதால் ஏராளமானோர் தங்களது வாழ்நாள் சேமிப்புகளை இழந்து, கடன் சுமைக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொள்வதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்துவந்தன. இணையவழி விளையாட்டுகளைத் தடைசெய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளும் தொடர்ந்து வலுப்பெற்று வந்தன.