

நாமக்கல் மாவட்டம் வேப்பங்கவுண்டன்புதூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (36) என்பவர் கடன் பிரச்சினையால் தன் மூன்று பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்துகொண்டது மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
அதேபோல் கடந்த மே மாதம் சென்னையைச் சேர்ந்த லோகநாதன் (38) என்பவர் கடன் தொல்லையால் தன் மகளைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்துகொண்டதும் திருச்சியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் தன் மனைவி, இரண்டு மகள்களோடு தற்கொலை செய்துகொண்டதும் வேதனைக்குரியவை.