

அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் மின்சார கார் தொழிற்சாலையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் திறக்கப்பட்ட முதல் மின்சார கார் தொழிற்சாலை என்கிற வகையிலும் சர்வதேச அளவில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகத் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்குக் கிடைத்த பலன் என்கிற வகையிலும் இது வரவேற்கத்தக்கது.
அதேவேளையில், மின்சார காருக்கான முதன்மைப் பாகங்கள் தயாரிப்பில் உள்ள சிக்கலையும் ஏற்கெனவே கார் தயாரிப்பு நிறுவனங்களால் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் கருத்தில் கொண்டு, எதிர்காலத் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம்.