

பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணம் 7 மாநிலங்களைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ஆந்திரத்திலும் நடைமுறைக்கு வருகிறது. இந்தத் திட்டம் மக்களுக்குப் பயனளிப்பதன் விளைவாகவே, இந்த நடைமுறையைப் பல மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளன. அதேநேரம், இந்த முறையில் இன்னும் மாற்றங்கள் தேவை என்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
2019இல் டெல்லியில் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் முதலில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழ்நாட்டில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஷீலா ராணி சுங்கத், பெண்களுக்கு இலவச சைக்கிள் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.