

பள்ளிகளில் சர்க்கரைப் பலகையை வைக்க வலியுறுத்திய மத்திய சுகாதார அமைச்சகம், இந்திய இனிப்பு, கார நொறுவைகளில் உள்ள எண்ணெய், சர்க்கரை, ஊடு கொழுப்பு (டிரான்ஸ் ஃபேட்) ஆகியவற்றின் அளவுகளைக் காட்சிப்படுத்த அரசுத் துறைகளுக்குச் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
உடல்பருமன், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்டவை இளம் வயதினரையும் பாதிக்கத் தொடங்கிவிட்ட நிலையில் இது வரவேற்கத்தக்கது. முன்பு எப்போதோ ஒரு முறை, எங்கோ ஒரு முறை சாப்பிட்டுவந்த வித்தியாசமான உணவு வகைகள், நொறுவைகளை இன்றைக்கு நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில், அடிக்கடி சாப்பிடத் தொடங்கிவிட்டோம்.