

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் (டேன்ஜெட்கோ) தொழிலாளர்கள், பணியின்போது விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது துயரக்கதையாகவே தொடர்கிறது. அண்மையில் மின் பகிர்மானக் கழகம் அதன் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை, தொழிலாளர்களின் ஆபத்தான பணிச்சூழல் மாறவில்லை என்பதையே உணர்த்துகிறது.
அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிப்போன மின்சாரத்தை உற்பத்தி செய்வது, அதிக மின் அழுத்த மின்சாரத்தை நெடுந்தூரத்துக்குக் கொண்டுசெல்வது, குறைந்த மின் அழுத்த மின்சாரத்தை நுகர்வோருக்கு விநியோகிப்பது ஆகிய ஆதாரமான வேலைகளை மின்பகிர்மானக் கழகம் செய்துவருகிறது.