

சிதம்பரத்தில் அரசு ஐடிஐ மாணவர்களைக் கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்த முயன்றதுடன், அவர்களைச் சரமாரியாகத் தாக்கி அதைக் காணொளியாக வெளியிட்ட சமூக விரோதிகளின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. படிக்கும் வயதில், மாணவர்கள் இத்தகைய குற்றங்களில் ஈடுபட நேர்வதும் தாக்கப்படுவதும் வேதனைக்குரியவை.
‘போதைப் பொருள் பரவல் குறைவாக உள்ள பாதுகாப்பான மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று’ எனத் தமிழ்நாடு காவல் துறை பெருமிதத்துடன் கூறிக்கொண்டாலும் கஞ்சா, போதை மாத்திரைகள், போதைக் காளான்கள் எனப் பல்வேறு வகையிலான போதைப் பொருள்கள் விற்பனை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது என்பதை அன்றாடம் வெளியாகும் செய்திகள் உணர்த்துகின்றன.