

வீடற்ற, மனநலம் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்காகத் தமிழக அரசு அண்மையில் கொள்கையை வெளியிட்டுள்ளது. சமூகத்தில் மிக மிகக் கீழடுக்கில் இருக்கும் இப்பிரிவினர் மீதான தனது அக்கறையை உறுதிப்படுத்தியுள்ள தமிழக அரசின் செயல் பாராட்டுக்குரியது.
2016ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர். இந்திய அளவில் நமது மாநிலம் ஐந்தாவது இடத்தில் இருந்தது. இவர்களில் வீடற்றவர்களின் எண்ணிக்கை 50%க்கும் அதிகம் எனக் கருதப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் பிப்ரவரி, 2025இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், வீடற்ற மக்களில் ஏறக்குறைய 70% பேர் பெண்கள், குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டோராக இருப்பது தெரியவந்துள்ளது.