

பதினான்கு ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைவாழ்க்கையை அனுபவித்துவிட்ட ஆயுள்தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை (premature release) செய்யத் தடையாக உள்ள சட்ட விதிகளை மறுபரிசீலனை செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அண்மையில் அறிவுறுத்தியுள்ளது.
குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் அளிப்பதைப் போலவே, உரிய தண்டனைக்காலத்தை முடித்த சிறைவாசிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதும் மக்கள் நல்வாழ்வு அரசின் பொறுப்பாகக் கருதப்படுவதால், இந்த அறிவுரை வரவேற்கத்தக்கது.