

அண்மையில் தேசியப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் புதுச்சேரியும் விடுபட்டுள்ளன. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு துறைகள் மூலமாக நிவாரணம் அளிப்பது தமிழகத்தில் இன்னும் நிறைவடையவில்லை. இந்தச் சூழலில் இத்தகைய போக்கு இழப்பின் தாக்கத்தை அதிகரிக்கும்.
தமிழகம் ஏற்கெனவே பல இயற்கைப் பேரிடர்களை எதிர்கொண்டிருந்தாலும், ஃபெஞ்சல் புயல் நிகழ்வு முற்றிலும் வேறுபட்டதாகவே இருந்தது. 2024 நவம்பர் 14இலேயே இந்தியக் கடலின் கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்தமாக உருவாகி, இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடித்துப் புயலாக வலுப்பெற்ற ஃபெஞ்சல், கணிக்க முடியாத வகையில் எல்லோரையும் திணறவைத்தது.