

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக மத்திய அரசு அதிகரிக்கப்போவதாக நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தபோது தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களிடமிருந்து பெறுகிற பிரிமியம் தொகை முழுவதையும் இந்தியாவிலேயே முதலீடு செய்கிற நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்கிற நிபந்தனையுடன் இந்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், இதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகளையும் அரசு கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.