கழிவுநீர் அகற்றும் தொழிலாளர்கள் காக்கப்பட வேண்டும்!

கழிவுநீர் அகற்றும் தொழிலாளர்கள் காக்கப்பட வேண்டும்!
Updated on
2 min read

தனியாருக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிச் சுத்தம் செய்யும் தொழிலாளர் உயிரிழக்க நேரிட்டால், அந்தக் குடியிருப்பின் உரிமையாளரே அதற்கு முழுப் பொறுப்பு என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அவரே இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், இதுபோன்ற மரணங்கள் நிகழாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதே இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.

சென்ச்னை விநாயகபுரத்தில் 2013இல் யோகேஷ் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பில் கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி முனுசாமி, விஷவாயு தாக்கி உயிரிழந்தார். அவருடைய குடும்பத்துக்குக் கருணை அடிப்படையில் ரூ.55 ஆயிரத்தை யோகேஷ் வழங்கினார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in