

இந்தியாவில் வெப்பநிலை பதிவு 1901ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அந்த வகையில் 2024தான் இந்தியாவின் மிக வெப்பமான ஆண்டாகப் பதிவாகியிருக்கிறது. ஆண்டு சராசரி வெப்பநிலை 25.75 டிகிரி செல்சியஸாக முன்பைவிட அதிகரித்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கவலை அளிக்கிறது.
கடந்த ஆண்டில் இந்திய அளவில் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 0.90 டிகிரி செல்சியஸ் அதிகரித்து 20.24 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச சராசரி வெப்பநிலை 0.20 டிகிரி செல்சியஸ் அதிகரித்து 31.25 டிகிரி செல்சியஸ் ஆகவும் உள்ளது.