

15 மாதங்களுக்கு மேலாக நீடித்துவந்த காஸா போர், ஒருவழியாக முடிவுக்கு வந்திருப்பது பெரும் நிம்மதி அளிக்கிறது. அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகளின் முயற்சியால் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கையெழுத்தாகியிருக்கும் இந்த அமைதி ஒப்பந்தத்தின்படி, ஆறு வாரங்களுக்குத் தாக்குதல்கள் நடத்தப்படாது.
அதேவேளையில், தற்காலிகமான இந்த ஒப்பந்தம் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்க, சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம். இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று இஸ்ரேலியப் பெண்களும், 90 பாலஸ்தீனர்களும் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.