

உயிர்க்கோளக் காப்பகமாக இருக்கும் நீலகிரியில் 2024இல் ஆறு புலிகள் உயிரிழந்திருப்பது கவலை அளிக்கிறது. இயற்கைக்கு மாறாகப் புலிகள் உயிரிழப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. மேற்கு மலைத் தொடரில் உள்ள நீலகிரியில் 2023இல் அடுத்தடுத்து 10 புலிகள் உயிரிழந்தன.
இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இயற்கையான மரணம், வேட்டையாடப்படுதல், மனித - உயிரின எதிர்கொள்ளல் போன்றவை இதில் அடங்கும். இந்தச் சூழலில் 2024இலும் ஆறு புலிகள் நீலகிரி காட்டுப் பகுதியில் உயிரிழந்திருக்கின்றன.