

சென்னை மாநகராட்சியில் தொழில் வரி 35 சதவீத உயர்வு அமல்படுத்தப்பட்டிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஏற்கெனவே மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், தொழில் வரி அதிகபட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
தொழில் வரிச் சட்டத்தின்படி, அரையாண்டு வருமானத்தின் அடிப்படையில் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் ஆகியோரிடம் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது.