

மதுபானக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய சூழலில், டாஸ்மாக் நிறுவனம் புதிய கடைகளைத் திறந்துகொண்டே போவது வருந்தத்தக்கது. தேனி மாவட்டம் பூத்திபுரம் கிராமத்தில் ராஜபூபால சமுத்திரக் கண்மாய் அருகே டாஸ்மாக் புதிய கடை ஒன்றைத் திறக்க இருந்தது.
இதை எதிர்த்து அவ்வூரைச் சேர்ந்த வழக்கறிஞர் குமாரலிங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தார். ‘மதுபானக் கடை தொடங்க உள்ள இடத்தின் அருகில் பெண்களுக்கான பொதுக்கழிப்பிடம் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையும் ரயில் பாதையும் இருப்பதால், மதுபானம் அருந்துபவர்கள் போதையில் விபத்துக்குள்ளாக வாய்ப்பு இருக்கிறது. முன்பு இருந்த மதுபானக் கடை அகற்றப்பட்ட இடமாகவும் இது உள்ளது.