Published : 13 May 2024 06:40 AM
Last Updated : 13 May 2024 06:40 AM
இந்தியாவில் மக்களைத் தாக்கும் நோய்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான நோய்களுக்கு மக்களின் உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையுமே காரணங்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருக்கிறது. சரிவிகித உணவுப் பழக்கமும் முறையான உடற்பயிற்சியும் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், இரண்டாவது வகை நீரிழிவு நோய் (Type 2 diabetes) ஆகியவற்றைத் தடுக்கும் எனத் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
தொற்றா நோய்களான உடல் பருமன், நீரிழிவு நோய் போன்றவற்றைக் கட்டுக்குள் வைக்கவும் மக்களின் ஆரோக்கிய வாழ்க்கையை உறுதிசெய்யவும் 17 வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாகவே இந்திய மக்களின் உணவுப் பழக்கத்திலும் வாழ்க்கை முறையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT