Published : 01 Apr 2024 06:20 AM
Last Updated : 01 Apr 2024 06:20 AM

ப்ரீமியம்
குறையும் நீர் இருப்பு: தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை மணி!

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநில அணைகளில் நீர் இருப்பு கணிசமாகக் குறைந்துவருவது குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது, மத்திய நீர்வள ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை. பெங்களூருவில் தற்போது நிலவிவரும் தண்ணீர்த் தட்டுப்பாடு, கர்நாடகத்தின் மற்ற பகுதிகளிலும் வரக்கூடும் என்கிற அச்சம் அங்கு இருக்கிறது. அதே நிலை தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளுக்கும் ஏற்படலாம் என்கிற அச்சத்தை, இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் எழுப்பியிருக்கின்றன.

மத்திய நீர்வள ஆணையத்தின் சமீபத்திய வாராந்திர அறிக்கையின்படி, தென் மாநிலங்களான கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா ஆகியவற்றின் பெரும்பாலான அணைகள் அவற்றின் கொள்ளளவில் 25%-க்கும் குறைவாக நிரம்பியுள்ளன. 2023இல் 39.4%ஆக இருந்த நீர் இருப்பு, 2024இல் 23%ஆகக் குறைந்துள்ளது; இதில் கேரளம் மட்டுமே விதிவிலக்கு. கிழக்கு இந்தியாவில் அதிகபட்சமாக 48.8% அளவு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x