Published : 19 Mar 2024 06:20 AM
Last Updated : 19 Mar 2024 06:20 AM
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் நான்கு மாணவர்கள் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. சாலை விதிகளைப் பின்பற்றுவதில் அலட்சியம் தொடர்வது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. மார்ச் 12 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுநாகலூரில், தனியார் பேருந்து ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெயினர் லாரி மீது மோதியதில், பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணித்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த 5 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் முதல் தலைமுறையினர் என்பது கவனிக்கத்தக்கது. நெடுஞ்சாலை ஓரம் கனரக வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்திவைப்பது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ஓட்டுநர்கள் அறியாததல்ல. எனினும், இது பரவலாகக் காணப்படக்கூடிய விதிமீறலாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் ஏராளமான விபத்துகளும் நிகழ்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT