Published : 05 Feb 2024 06:20 AM
Last Updated : 05 Feb 2024 06:20 AM
ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதும், இந்தப் பின்னணியில் அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதும் தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2019 சட்டமன்றத் தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது.
ஜேஎம்எம் கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சர் ஆனார். இந்நிலையில், பழங்குடியினருக்கு நிலம் வழங்கும் பரிவர்த்தனைகளில் போலி ஆவணங்களின் மூலம் பொருளாதாரப் பயன்களை அடைந்ததாக ஹேமந்த் சோரன் மீது 2023இல் குற்றம்சாட்டியது அமலாக்கத் துறை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT