Published : 05 Jan 2024 06:25 AM
Last Updated : 05 Jan 2024 06:25 AM
உல்ஃபா அமைப்பின் பேச்சுவார்த்தைக்கு ஆதரவான பிரிவு, மத்திய அரசு, அசாம் மாநில அரசு ஆகியவற்றுக்கு இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது அசாமில் அமைதி திரும்புவதற்கான முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோர் முன்னிலையில் உல்ஃபா அமைப்பின் பேச்சுவார்த்தைக்கு ஆதரவான பிரிவின் தலைவர் அரவிந்த ராஜ்கோவா உள்ளிட்டோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
அசாமைத் தனி நாடாக அறிவிக்கக் கோரி, 1970களின் இறுதியில் உருவான உல்ஃபா அமைப்பு, ஆரம்பத்தில் பூர்வகுடி மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. எனினும், பின்னாள்களில் கட்டற்ற வன்முறை, பிணைத்தொகை கோரி ஆட்களைக் கடத்துவது எனச் செயல்பட்டதால் மக்களின் தார்மிக ஆதரவை இழந்தது. கூடவே, அமைப்பு இரண்டாகப் பிளவுபட்டது. தனிநாடு கோரிக்கையை இன்னமும் கைவிடாத உல்ஃபா (இண்டிபென்டன்ட்) பிரிவு தற்போது பலவீனமான நிலையில்தான் இருக்கிறது. அதன் தலைவர் பரேஷ் பருவா தற்போது வடகிழக்கு மயன்மாரில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT