Published : 05 Dec 2023 05:33 AM
Last Updated : 05 Dec 2023 05:33 AM

ப்ரீமியம்
நம்பிக்கையூட்டும் ஜிடிபி வளர்ச்சியும் எஞ்சியிருக்கும் எதிர்பார்ப்புகளும்

செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவுற்ற இரண்டாவது காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) தற்காலிக மதிப்பீடுகளை வெளியிட்டிருக்கிறது தேசியப் புள்ளிவிவர அலுவலகம். இதன்படி, நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 7.6%ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலாண்டில் இது 7.8%ஆக இருந்த நிலையில், இந்த முறை சற்றே பின்னடைவுதான். என்றாலும், ரிசர்வ் வங்கி கணித்ததைவிடவும் இது அதிகம் என்பது நம்பிக்கையளிக்கிறது.

இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியமான எட்டு துறைகளின் மொத்த மதிப்புச் சேர்ப்பானது (ஜிவிஏ), இரண்டாவது காலாண்டுக்கான மதிப்பீட்டின்படி 7.4%ஆகக் கணிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டை (7.8%) ஒப்பிட இது குறைவுதான். உற்பத்தித் துறை, சுரங்கத் தொழில், கட்டுமானம் ஆகிய துறையில் ஏற்பட்டிருக்கும் சாதகமான வளர்ச்சி, பிற துறைகளில் ஏற்பட்டிருக்கும் சரிவைச் சற்றே ஈடு செய்திருக்கிறது. அத்துடன், இரண்டாவது காலாண்டில் மொத்த மதிப்புச் சேர்ப்பானது, தொடர்ந்து 7%க்கும் அதிகமாக இருப்பதையும், இந்த வளர்ச்சி உறுதிசெய்திருக்கிறது. ஆண்டின் ஆரம்பகட்டத்தில் சுணக்கம் கண்டிருந்த உற்பத்தித் துறை, 13.9%ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், கட்டுமானத்துறை கடந்த ஐந்து காலாண்டுகளில் அதிக வளர்ச்சி (13.3%) கண்டிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x